தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் -"குஷ்டம் தீர்த்த படித்துறை" - சிறப்பு ஏற்பாடுகள் - Thamirabarani Maha Pushkaram 2018 Thamirabarani Maha Pushkaram 2018: தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் -"குஷ்டம் தீர்த்த படித்துறை" - சிறப்பு ஏற்பாடுகள்

...தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் 2018 வெகு சீரும், சிறப்புமாக நடைபெற உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும், காவல் துறையினருக்கும், ஊடக நண்பர்களுக்கும், உள்ளூர் பொது மக்களுக்கும் மற்றும் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" தன்னார்வ தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வோர்.... "ஸ்ரீ தாமிரா எண்டர்ப்ரைசஸ்" மற்றும் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா", திருநெல்வேலி ....

...144 ஆண்டுகளுக்கு ஒரு முறை.....நமது தலைமுறையில் மீண்டும் காணக்கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு .....தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் - 2018 அக்டோபர் 11 முதல் 23 வரை ...थामिरबरनी महा पुष्कर 2018 - एक बार 144 साल में....తమిరా బరని మహా పుష్కరాలూ 2018 - ఒకసారి 144 సంవత్సరాలలో....ಥಮಿರಾಬರಾನಿ ಮಹ ಪುಷ್ಕಾರಂ 2018...144 ವರ್ಷಗಳಲ್ಲಿ ಒಮ್ಮೆ....

தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் -"குஷ்டம் தீர்த்த படித்துறை" - சிறப்பு ஏற்பாடுகள்

"குஷ்டம் தீர்த்த படித்துறை" - வண்ணார்பேட்டை 

ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் 2018" பல்வேறு தீர்த்த கட்டங்களில் தற்பொழுது மிகவும் சிறப்பாக  நடைபெற்று வருகிறது...

நமது வண்ணார்ப்பேட்டை "குஷ்டம் தீர்த்த படித்துறை" யில் புனித நீராட வரும் அன்பர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் "அகில பாரதிய துறவியர்கள் சங்கத்தின்" ஆசிகளுடனும், வழி காட்டுதலுடனும் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா"  மூலம் அனைத்து தரப்பு நல்லெண்ணம் கொண்ட உள்ளூர்வாசிகள் அனைவரின்mஒத்துழைப்புடனும்,ஆதரவுடனும் 
சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது...

மிகவும் முக்கியமாக, நமது மாற்று திறனாளி சகோதர, சகோதரிகள் பயன்பெறும் வகையில் மிக எளிதாக "தீர்த்த கட்ட" படிகள் வரை (குளிப்பதற்கு ஏற்ற இடம் வரையிலும்) அவர்களது வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

மற்றும், ஆண்கள், பெண்களுக்கென தனி உடை மாற்றும் அறை வசதி, CCTV கேமரா கண்காணிப்பு வசதி, தனி மருத்துவ முதலுதவி வசதி, தீயணைப்பு துறையின் நீச்சல் வீரர்கள் (பாதுகாப்பு உபகரணங்களுடன்), குடி தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி ஆகிய அனைத்தும் மிகவும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....

மேலும், காவல் துறையினர்  மற்றும் மாநகராட்சியினர் பகல் முழுவதும் இருந்து பக்தர்கள் பாதுகாப்பான முறையிலும், சுகாதாரமான முறையிலும் புனித நீராடி செல்ல தங்களது முழு ஒத்துழைப்பை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது...

தினசரி நிகழ்வுகள், முக்கிய விருந்தினர்கள் வருகை, அனைத்து பூஜை, ஹோமம் மற்றும்  ஹாரத்தி புகைப்படங்கள் விரைவில்.....

தற்பொழுது நேரமின்மை காரணமாக ஒரு சில புகைப்படங்கள் மட்டும் இதோ உங்கள் பார்வைக்கு .....

ஓம் நம ஷிவாய ...














No comments:

Post a Comment