Thamirabarani Maha Pushkaram Website Launch - 28-09-2018 - Thamirabarani Maha Pushkaram 2018 Thamirabarani Maha Pushkaram 2018: Thamirabarani Maha Pushkaram Website Launch - 28-09-2018

...தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் 2018 வெகு சீரும், சிறப்புமாக நடைபெற உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும், காவல் துறையினருக்கும், ஊடக நண்பர்களுக்கும், உள்ளூர் பொது மக்களுக்கும் மற்றும் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" தன்னார்வ தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வோர்.... "ஸ்ரீ தாமிரா எண்டர்ப்ரைசஸ்" மற்றும் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா", திருநெல்வேலி ....

...144 ஆண்டுகளுக்கு ஒரு முறை.....நமது தலைமுறையில் மீண்டும் காணக்கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு .....தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் - 2018 அக்டோபர் 11 முதல் 23 வரை ...थामिरबरनी महा पुष्कर 2018 - एक बार 144 साल में....తమిరా బరని మహా పుష్కరాలూ 2018 - ఒకసారి 144 సంవత్సరాలలో....ಥಮಿರಾಬರಾನಿ ಮಹ ಪುಷ್ಕಾರಂ 2018...144 ವರ್ಷಗಳಲ್ಲಿ ಒಮ್ಮೆ....

Thamirabarani Maha Pushkaram Website Launch - 28-09-2018

புஷ்கர இணைய தள சேவை தொடக்கம் :

அகில பாரதீய துறவியர் சங்கம் நடத்தும் தாம்ரபர்ணீ  மஹா புஷ்கரத்தை முன்னிட்டு நமது "தாமிரா தர்ம ரக்ஷணா ஸபா" அறக்கட்டளை மூலம் இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு தாம்ரபர்ணீ புஷ்கரம் வரும் யாத்ரீகர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது...

28-09-2018 அன்று மாலை 6:00 மணி அளவில், திருநெல்வேலி ஜங்ஷன் சிருங்கேரி ஸ்ரீ சாரதா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற "புஷ்கர விழா அழைப்பிதழ்" வெளீயீட்டு விழாவில் "விழா அழைப்பிதழை" "சீர் வளர் சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் (தலைவர், அகில பாரதீய துறவியர்கள் சங்கம், கோவை) அவர்கள் வெளியிட  மன்னார்குடி ஸ்ரீ, ஸ்ரீ, ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் அவர்கள் மற்றும் அனைத்து துறவியர் பெருமக்களும் பெற்றுக்கொண்டார்கள்...

அதனை தொடர்ந்து,

நமது www.thamirabaranimahapushkaram.com என்ற இணைய தள சேவையை, மன்னார்குடி ஸ்ரீ, ஸ்ரீ, ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் அவர்கள் தமது பொற்கரங்களால் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் தவத்திரு. ஸ்ரீ ராமனந்தர் ஸ்வாமி ஜி (தலைவர் - தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் 2018) திரு. ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் (Retd.  ADSP துணைத்தலைவர் - தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் 2018) மற்றும் அனைத்து துறவியர் பெருமக்களும் முன்னிலை வகித்தனர்.

இந்த இணைய தள வடிவமைப்பாளரும், "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" ஸ்தாபகருமாகிய ஸ்ரீ ராம் அவர்கள் இணைய தளம் பற்றி குறிப்பிடுகையில், தீர்த்த கட்டங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனால் பிற மாநிலத்தவர்களும் பயன் பெறுவர் எனவும் தெரிவித்தார்... 

இந்த இணைய தளம் மூலம், யாத்ரீகர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில்  இருந்து (எந்த மாவட்டம் அல்லது மாநிலமாக இருப்பினும்) குறிப்பிட்ட தீர்த்த கட்டம் செல்ல ஆகும் தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது பிரயாணத்தை திட்டமிடலாம்...

மேலும், புஷ்கரம் பற்றிய அனைத்து புதிய நிகழ்வுகளும்  இந்த இணைய தளத்தில் கிடைக்கும் படி வழி வகை செய்யப்பட்டுள்ளது. 
சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ....

புகைப்பட உதவி: திரு. கணேசன் அவர்கள் , புகைப்பட கலைஞர், பாளை...... நன்றி 








No comments:

Post a Comment